Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்னா ஹசாரே எங்கள் பக்கம் மீண்டும் வருவார் ~ அரவிந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரே இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில், தங்கள் பக்கம் மீண்டும் வருவார் என்று அன்னா குழுவில் இடம் பெற்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அவர் , அனைவரும் அன்னா ஹசாரே தங்களை விட்டு சென்றுவிட்டதாக கூறி வருவதாகவும், ஆனால், அவர் தங்களது இதயங்களில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலில் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் தாங்கள் செய்யும் பணியை பார்த்து, அன்னா ஹசாரே தங்களுடன் வருவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மேலும், அரசியல் ஒரு சாக்கடை என அன்னா ஹசாரே கருதுவதாகவும், அரசியலை சுத்தப்படுத்த அதில் ஈடுபடுவதை தவிர தங்களுக்கு வேற வழியில்லை என்பதால் அதில் குதிப்பதாகவும் அரவிந்த் தெரிவித்தார். 

ஒரு வாரத்துக்கு முன்பு தான், அரசியல் பிரசாரத்துக்கு தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post