Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை மற்றும் இந்தியா சுற்றுலா, வர்த்த உறவுகள் பாதிக்கப்படும் ~ ராஜாகர்ணா

தமிழகத்தில் இலங்கை நாட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பங்களால் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா மற்றும் வர்த்த உறவுகள் பாதிக்கப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் ராஜாகர்ணா தெரிவித்துள்ளார்.

விரும்பதக்காத இந்த சம்பவங்களால் கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக சிறிய அளவிலான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக கூறியுள்ள அவர், தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள நீண்ட கால உறவை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவு படுத்தும் போது அதில் தமிழகமும் பயன்பெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள ராஜா கர்ணா, தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பேருந்துகள், லாரிகள், ட்ரக்குகள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் இலங்கை இறக்குமதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு, திருப்பூர், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து 1 புள்ளி 90 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு ஜவுளி, சர்க்கரை, காய்கறிகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும்இவை அனைத்தும் இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகளால் தமிழகம் அடைந்து வரும் பலன்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post