Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது: முலாயம்சிங பேட்டி

பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், கடும் அமளிக்கு மத்தியில் எஸ்.சி., எஸ்.டி, இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 16-வது பிரிவில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை பிரதமர் அலுவலக இணை மந்திரி வி. நாராயணசாமி தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து சபையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு வெளியே சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கி தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியல் சட்ட திருத்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

நாங்கள் அதை முழு பலத்துடன் எதிர்ப்போம். இந்த இடஒதுக்கீட்டால் அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post