Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒபாம மீண்டும் அமெரிக்க அதிபராக வாய்பளிக்க வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஏற்புரையாற்றினார்.

அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், ஜோ பிடன் சிறந்த துணை அதிபராக பணியாற்றி வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அமெரிக்க பொருளாதாரம் உலகிலேயே மிக வலுவானது என்றும் புதிய வேலைவாய்ப்புகள் அடுத்த 4 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறிய அவர் இரு முரண்பட்ட கொள்கைகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய வேண்டியது அமெரிக்க மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்று கூறினார்.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக மாநாடு நடத்தப்படும் இடம் மாற்றப்பட்டது. வடக்கு கரோலினா மாநிலத்தின் கேர்லோட் நகரில் நிகழ்த்திய ஒபாமாவின் உரையை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பார்த்தனர்.

வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆசிய சுற்றுப் பயணத்தில் இருப்பதால், மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உள்ளிட்டோர் ஏற்கெனவே உரையாற்றினர்.

பல்வேறு கருத்துக் கணிப்புகளில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னிக்கும் ஒபாமாவுக்கும் இடையே நெருக்கமான போட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post