Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முஸ்லிம் காங்கிரஸ் முடிவு கிழக்கில் ஆட்சியமைக்க ஆளும்கட்சிக்கு ஆதரவு


கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாம் என்று ஒரு பகுதியினரிடையே கருத்து நிலவியபோதும், நேற்றிரவு நடந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவார்.

தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும்கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், கிழக்கு முதல்வர் பதவி, மாகாணசபையின் வெகுமதி ஆசனங்களில் ஒன்று, 17வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை சிறிலங்கா அரசிடம் கோரியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சு, இரண்டு பிரதி அமைச்சர் பதவிகள், அரச கூட்டுத்தாபனங்களின் இரண்டு தலைவர் பதவிகள் ஆகியவற்றுக்கும் இலங்கை அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post