Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சுசில் குமார் ஷிண்டே

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தை மக்கள் மறந்து விடுவார்கள் எனக் கூறியதால் கண்டனத்திற்கு ஆளான மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு, மத்திய மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ய சிபாரிசுக் கடிதம் எழுதியதாக ஷிண்டே மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, தனியார் நிறுவனத்திற்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் என்று கூறினார்.

ஒடிஷாவில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதாக தன்னிடம் அந்த நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் தான், கடிதம் எழுதினேன் என்றும் ஷிண்டே விளக்கமளித்துள்ளார். எனினும், தவறான தகவல்களை அளித்த காரணத்திற்காக, அந்த நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் ஷிண்டே தெரிவித்தார்.

இதனிடையே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டை மக்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்று கூறியது, வாக்களித்த மக்களை முதுகில் குத்துவது போன்றது என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post