Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொழும்பு வந்தார் பிளேக் – பீரிசுடன் முக்கிய சந்திப்பு இன்று


தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் நேற்றுமாலை கொழும்பு வந்துள்ளார்.

இன்று அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கை அரசின் செயற்திட்டம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் குடியியல் சமூகப் பிரதிநதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

இம்முறை அவர் இலங்கை அதிபரைச் சந்திக்கும் திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவரவில்லை.

பிளேக் தனது பயணத்தை முடித்து திரும்ப முன்னர் நாளை கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசவும் ஏற்பாடாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post