மாகாணசபைகளிடம் உள்ள காணி அதிகாரங்களைப் பறிக்கும் சர்ச்சைக்குரிய திவி
நெகும சட்டமூலத்துக்கு, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி
ஒப்புதல் வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகம் தெரிவு செய்யப்படாத நிலையிலேயே, சர்ச்சைக்குரிய இந்தச் சட்டமூலத்துக்கு வடமாகாண ஆளுனர் மூலம் இலங்கை அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
அதேவேளை புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக இந்தச் சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஊவா மாகாணசபையில் நேற்று திவி நெகும சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வடமேல் மாகாணசபையிலும், மேல் மாகாணசபையிலும் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணசபையில் வரும் ஒக்ரோபர் 2ம் நாளும், வடமத்திய மாகாணசபையில் ஒக்ரோபர் 3ம் நாளும் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
முன்னதாக, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், மாகாணசபைகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று இலங்கையின் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்தநிலையிலேயே கிழக்கில் ஆட்சி அமைத்த கையுடன் திவி நெகும சட்டமூலத்தை நிறைவேற்றும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது.
எனினும் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் வாக்களிப்பர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர வலியுறுத்தி வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வடக்கு மாகாணசபையின் ஒப்புதலைப் பெறாமல், இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட ஆளுனரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பது செல்லுபடியானதா என்ற கேள்வியும் உள்ளது.
இந்தநிலையில், வடக்கு மாகாணசபையின் ஒப்புதலைப் பெறாமல், திவி நெகும சட்டமூலத்தை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கடந்தவாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.