Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கபாடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நீதித்துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அவர், வரிவிதிப்புச் சட்டங்களில் வல்லுநராக திகழ்ந்தவர்.

மேலும் நதிகள் இணைப்பு விவகாரம், கர்நாடக சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஊழல் தடுப்பு தலைமை ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது உள்பட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை கபாடியா வழங்கியுள்ளார்.

புதிய தலைமை நீதிபதியாக பொற்ப்பேற்றுள்ள அல்டமாஸ் கபீருக்கு, குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post