Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் படத்தயாரிப்பாளரை கொலை செய்பவருக்கு சன்மானம் - குழாம் அஹமட் பிலோர்

இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் அமெரிக்க குறுந்திரைப்படத்தின் தயாரிப்பாளரை படுகொலை செய்பவருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என பாகிஸ்தானின் அமைச்சர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சரான குழாம் அஹமட் பிலோர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் காலத்திலும் இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போரை படுகொலை செய்வோருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துச் சுதந்திரம் உள்ளபோதிலும் மதத் தலைவர்களுக்கு இழிவு ஏற்படுவதை தடுப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டிய தேவை உள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் அவ்வாறில்லாவிடின் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் தயாரிப்பாளரை படுகொலை செய்வதற்கு உதவுமாறு பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் தலிபான் போராளிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும் பாகிஸ்தான ரயில்வே துறை அமைச்சரின் இந்த கருத்துக்களை பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் கண்டித்துள்ளது. இது குறித்த அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே தவிர பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அஹமட் பிலோர் பாகிஸ்தான் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏ.என்.கட்சியை பிரதிநித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post