Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் பதவிவிலகல்

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித்பவாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 19 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

நீர்ப்பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகாரையடுத்து துணை முதல்வராக இருந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

அவரைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த 19 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதங்களை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். 

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post