Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெயர் மாற்றத்திற்காக காத்திருக்கும் விஜயின் "துப்பாக்கி".


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்,நடிகர் விஜய் நடித்த படத்திற்கு "துப்பாக்கி" என எந்த நேரத்தில்  பெயர் வைத்தார்களோ தெரியவில்லை,  இன்னும்  இப்படம் குறித்த சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.

இப்படத்தின்  படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்தும் கூட, படத்திற்கான  பெயர் சிக்கலால், பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது "துப்பாக்கி".அண்மையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாடலாசிரியர் மதன் கார்கி,அண்மைக் காலமாக "துப்பாக்கி" படத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக பல  ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.ஆனால் "துப்பாக்கி" என்ற பெயரிலேயே இப்படத்தை வெளியிட இயக்குனர் முருகதாஸ் விரும்புவதாகவும், அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் கூட, "துப்பாக்கி" படத்திற்கான மாற்று பெயர்களாக "சரவெடி" மற்றும் மும்பைத்தமிழன்" போன்றவை  அமையக்கூடும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வரும் தீபாவளிக்கு வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயின் "துப்பாக்கி", பல விடை தெரியாத கேள்விகளால்,பெட்டிக்குள் முடக்கப்படுமா என்ற அச்சம் விஜய் இரசிகர்களை இப்பவே பற்றிக்கொண்டுள்ளது.

இதற்கிடையே நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் முருகதாசுக்கு அலை செய்திகள் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.



[vuukle-powerbar-top]

Recent Post