Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரிப் பிரச்சனைக்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பான கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது என்றும், கடந்த 19ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில், முக்கால் டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட பிரதமர் உத்தரவிட்டார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏற்புடையது இல்லை என்றாலும், இந்த பங்கையும் திறந்து விட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post