Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு குறித்த சி.ஏ.ஜி.,யின் அறிக்கை தொடர்பான மத்திய அரசின் கருத்து

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு குறித்த சி.ஏ.ஜி.,யின் அறிக்கை தொடர்பான மத்திய அரசின் கருத்து, வரும் 14-ம் தேதி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிடம் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை நிலக்கரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வருவாய் இழப்பு குறித்த சி.ஏ.ஜி.,யின் கணிப்பு தவறானது என்று மத்திய அரசு கருத்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பாதக சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு ஆராய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post