Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அரசின் செயற்திட்டம் குறித்த ஆராய வருகிறார் பிளேக்


தெற்கு ,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக் அடுத்தவாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 12ம் நாள் இலங்கைக்கு செல்லும் பிளேக் 14ம் நாள் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.

அத்துடன் குடியியல் சமூகப் பிரதிநிதிகளையும், வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ள பிளேக், தனது பயணத்தின் முடிவில் கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post