Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பாசனத்திற்காக மலர்களைத் தூவி தண்ணீரைத் திறந்து வைத்தார். 

முதல் கட்டமாக அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இது அதிகரிக்கப்பட்டு 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் கல்லணையை அடைய 2 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள, சுமார் 16 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். 

இதுதவிர, அங்குள்ள மின் நிலையங்களின் மூலம் 400 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி, குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் மேட்டூர் அணை, போதிய நீர்வரத்து இல்லாததால் இந்த ஆண்டு மிகவும் தாமதமாக திறக்கப்படுகிறது. 

இதனால், டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 252 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2004 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 84 புள்ளி 24 அடியாக உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post