Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக வேளாங்கன்னி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வேளாங்கன்னியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.மேலும், அணுஉலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பக் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post