Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு ஆலை அதிபர் கைது


சிவகாசி:விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையின் உரிமையாளர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


கடந்த 5-ஆம் தேதி சிவாகசி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கோர வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 38பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.இவ்விபத்தில் முக்கிய குற்றவாளியான பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் தலைமறைவாக இருந்தார்.


இந்த நிலையில் விருதுநகர் காவல்துறையினர் மதுரை அருகே உள்ள சமயநல்லூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த முருகேசனை கைது செய்தது.கைதுசெய்யப்பட்ட முருகேசனை காவல்துறையினர் விருதுநகர் காவல்துறை கண்கானிப்பாளர் அலுவகத்தில் வைத்து விசாரணை நடைத்துகின்றனர்.

மேலும் இந்த விபத்தின் காரணமாக இதுவரை மொத்தம் 13 பேரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post