Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளத்தில் மீண்டும் வன்முறையை தூண்டும் காவல்துறை பதற்றத்தில் மக்கள்

கூடங்குளத்தில் மீண்டும் வன்முறை பதற்றத்தில் மக்கள் அனைவரும் தவித்துக்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இடிந்தகரையில் தற்போது காவல்துறையினர் வீடு வீடாக சென்று சோதனையிடும் பேரில் அங்கிருக்கும் மக்களை துன்புறுத்துவதாகவும் மற்றும் சிறிய பசங்க என்று பாராமல் கூட அவர்கள் மீதும் வன்முறையினை மேற்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காவல்துறையினர் மேற்கொலவ்து மீண்டும் வன்முறையினை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் உயரத்தில் பறந்து கண்காணித்த ரோந்து விமானங்கள் இன்று தற்போது மக்கள் குடியிருப்புக்கு தாழ்வாக சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சக்கரநாராயணபுரத்தில் இருக்கும் அம்மையப்பா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post