Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தன் அடுத்த படத்தை ஆரம்பித்த அருண் விஜய்.


"தடையற தாக்க" படத்தின் பின்னர் தனக்கு பொருத்தமான கதைக்காக,இவ்வளவு காலமும் பொறுமையாக காத்திருந்த அருண் விஜய்க்கு தற்போது ஒரு கதை பிடித்துப்போக, அதில் நடிப்பதற்கு அவர் சம்மதம் வழங்கியுள்ளார்.

"பிதர் டச் என்டேர்டைன்மென்ட்" பட நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில், அருண் விஜய் ஜோடியாக "கோ" பட நாயகி கார்த்திகா நடிக்கவுள்ளார்.இன்று படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள இப்படத்தை சிவ ஞானம் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

எப்போதும் அருண் விஜய் தனது படத்திற்கான முதல் படப்பிடிப்பை பழனி முருகன் கோவிலிலே ஆரம்பிப்பது வழக்கம், அந்த வகையில் இன்று பழனி முருகன் கோவிலில் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

"மாலை பொழுதின் மயக்கத்திலே", மற்றும் "மரினா" படங்களில் நடித்த சதீஷ் இந்தப்படத்தில் நகைச்சுவை வேடம் ஏற்கவுள்ளார்.அண்மையில் பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்து மேற்படி அருண் விஜய்க்கு  ஜோடியாக நடிக்க தன்னை  தயார்படுத்தியுள்ளார் நடிகை கார்த்திகா.

[vuukle-powerbar-top]

Recent Post