Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'அந்த போலீஸ்காரன் அக்கா, தங்கச்சி கூட பிறக்க வில்லையா' - வைகோ ஆவேசம்

இன்று மிகுந்த வேதனையில் உள்ள இடிந்தகரை மக்களுக்கு  ஆறுதல் சொல்வதற்கு வைகோ அவர்கள் இடிந்தகரை வந்திருந்தார் . காவல்துறையின்  அராஜகத்தை கண்டிக்கும் போது  வைகோ கூறியதாவது .. 

இடிந்தகரையில் லூர்து அன்னையின் ஆலயத்தில் சிறு நீர் கழித்த போலீஸ் காரன் மனிதன்தானா ? அந்த போலீஸ் காரன் அக்கா, தங்கச்சி கூட பிறக்க வில்லையா? இந்த சம்பவம் நடந்த பிறகும் இந்த பகுதி இளைஞர்கள் அமைதியாகத் தானே இருக்கிறார்கள். இனி இந்த கடற்கரையில் காவல்துறை இருக்ககூடாது. உடனே வெளியேற்று. உள்துறை அமைச்சர் சிண்டே கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு சதி என்று உளறுகிறார். கூடங்குளம், இடிந்தகரை இந்தியாவில்தானே இருக்கிறது ? கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஒரே இடத்தில் 300 நாட்களுக்கு மேல் தொடர்ந்து போராட்டம் என்பது இந்தியாவில், உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் மிகவும் உன்னதமானது. காவல்துறை நிராயுதபாணியாக இருந்த இந்த மக்கள் மீது வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. மணப்பாட்டில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் இறந்து போன அந்தோணி ஜார்ஜ் வீட்டிற்கு சென்றிருந்தேன். அந்த வீட்டில் அந்தோணி ஜார்ஜ் மகள் கதறி அழுததை கண்டபோது, என் மகள் அழுவதைப்போல் உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார் . 












[vuukle-powerbar-top]

Recent Post