Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோயம்பேட்டில் ஆர்ப்பாட்டம்



கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தனர் அதில் நேற்றைய தினம் கூடங்குளத்தில் போராட்ட மக்கள் மீது தடியடி நடத்தியதை முக்கியமான கண்டிப்பாக இருந்தது. மற்றும் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் ஒரு மீனவர் இறந்ததையும் அவர்கள் கண்டித்தார்கள்.

கூடங்குளத்தில் இருக்கும் அணுஉலையை திறக்க கூடாது என்றதான் இருந்தது இந்த அணுஉலை முன்னதாக கேரளாவில் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது பின்னர் அங்கு எழுந்த எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பின்னர் தமிழகத்தில் மக்களின் எதிர்ப்பை மீறியும் திறக்க இருப்பதாகவும் மற்றும் அங்கு எரிபொருள் நிரப்பும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவழவன் அந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஒரு மணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை கைதுசெய்தனர்.


[vuukle-powerbar-top]

Recent Post