Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசியில் வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தற்போது ஆய்வு

சிவகாசியில் வெடிவிபத்து நிகழ்ந்த ஓம்சக்தி பட்டாசு ஆலையில் அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

38 பேரை பலிகொண்ட அந்த பட்டாசு ஆலை, தற்போது மயான பூமி போன்று காட்சியளிக்கிறது. இடிந்து விழுந்த கட்டடங்கள்,. வெடித்து சிதறிய பட்டாசுகள், வெடிக்காத வெடி மருந்துகள் என எந்த பகுதியே கோரமாக காட்சியளிக்கிறது.

தற்போது அங்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தை சீரமைக்கும் பணியில், தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் எந்திரம் மூலம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post