Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் அடுத்த ஆண்டு முதல் இரத்து

அலைபேசி வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

புதிய தொலைத் தொடர்புக் கொள்கை கடந்த மே மாதம் வெளியானது. இதில் ரோமிங் கட்டணம் வசூலிப்பதை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நடைமுறை எப்போது அமலாகும் என தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான் அடுத்தாண்டு ரோமிங் ரத்து அமலாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அலைபேசி வாடிக்கையாளர் நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் ஒரே எண்ணையே பயன்படுத்தும் வசதியும் அடுத்தாண்டு முதல் கிடைக்கும்.

இது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர் கூறுகையில் ரோமிங் முறை நீக்கத்தின் முதல் படியாக ஒருங்கிணைந்த உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post