Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மத்திய நீர்ப் பாசனத் துறை செயலாளர் துருவ் விஜய் சிங் (DHRUV VIJAY SINGH) எழுதிய கடிதம் வந்திருப்பதாக, மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் எம். சாய்க்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து உறுப்பு மாநிலங்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார். காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறும் தேதி தொடர்பாக, ஊடகங்களில் மாறுபட்ட தேதிகளை வெளியிட்டு வருவதாகவும் சாய்க்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஆணையத்தைக் கூட்ட உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆணையத்தை கூட்ட மத்திய அரசு முன் வந்துள்ளது.

முன்னதாக, காவிரி ஆணையக் கூட்டம் கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றது.
[vuukle-powerbar-top]

Recent Post