Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருவர் தீக்குளிப்பு


ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது. 

இன்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார் என்று கூறப்படுகிறது. அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post