Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பல்வேறு தவறான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது ~ பாஜக

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு தவறான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறுவதற்காக பல கோடி ரூபாய் செலவில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்து வருவதாகவும் பாரதிய ஜனதா புகார் கூறியுள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில், சுமைகளை அதிகரித்து வரும் மத்திய அரசு, பொதுமக்களின் ஆதரவை இழந்து விட்டதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதனை 100 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து தக்க வைக்க கொள்ள நினைப்பதாகவும் மத்திய அரசு மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 

ரூ. 100 கோடி செலவில் விளம்பரம் : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதி என்ன? ஆனால், கொடுத்த வாக்கை மீறிவிட்டு, தற்போது பத்திரிகைகள் மூலமாக விளம்பரம் செய்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஒரு அரசு, நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் வெளிநாடுகளுக்கு அடிபணிந்தது இதுவே முதன் முறை என தெரிவித்துள்ளார் பா.ஜ., மூத்த தலைவர் ரானஜ்நாத் சிங். அத்வானி ஆவேசம் : 

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்குதலுக்கு மத்திய அரசு அடிபணிந்து விட்டதாக, பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அமெரிக்காவின் பல நகரங்களில் வால்மார்ட் என்ற மிகப்பெரிய நிறுவனம் மூடப்பட்டு வரும் அதே வேளையில், இந்தியாவில் அந்த நிறுவனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

சமாஜ்வாதியின் இரட்டை வேடம் : இந்த பிரச்னையில், சமாஜ்வாதி கட்சி இரட்டை வேடம் போடுவதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் ஷா நவாஸ் உசேன் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியும், மதவாதமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு இடங்களில் வன்முறை நடந்து வருகிறது. 

அங்கு முறையான நிர்வாகம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனிடையே, மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியது சரியான நடவடிக்கைதான் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி கூறியது அந்த கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த கருத்து அருண் ஷோரியின் தனிப்பட்ட கருத்து எனவும், இதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், முரளி மனோகர் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post