Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய பிரதேச எல்லையில் பதற்றம் ~ வைகோ கைது

புத்தமத  அடிக்கல் நாட்டு விழாவுக்கு கொடுங்கோலன் ராஜபக்சே மத்திய பிரதேச சான்சிக்கு வந்துள்ளார். அவரது வருகையினை கண்டித்து பல இடங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும் அதே வேளை மத்திய பிரதேச எல்லையில் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கிருக்கும் நிலைமையானது மிகவும் ஒரு பதற்றமான சூழலாகவும் மற்றும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சற்று முன் பேசிய வைகோ நாங்கள் சாஞ்சியை நோக்கி நடந்து செல்லப்போகிறோம் என அறிவித்தார், இதனிடையே அங்கு காணப்படும் பதற்றத்தை தணிப்பதற்காக, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அந்த மாவட்ட துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வைகோ தலைமையிலான தமிழ் நாட்டை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மத்திய பிரதேச எல்லையில் இருந்து முன்னேறிச் செல்ல முடிவெடுத்த வைகோவின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 

அனால் வைகோ இதை ஏற்கவில்லை, நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம் என்றால் சிறையில் அடைக்க வேண்டும், இப்படி இங்கு தடுத்து வைப்பது மற்றும் கல்யாண மண்டபத்தில் தடுத்து வைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் ,இல்லாவிடில் எங்களை சாஞ்சி நோக்கி போக விடுங்கள், அவ்வாறு முடியாவிட்டால் எங்களை கைது செய்யுங்கள் என்று திட்டவட்டமாக கூறினார்.

அத்துடன் அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றி மற்றொரு ஊரில் இருக்கும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நிலைமை இருக்க வைகோ தொண்டர்கள் ராஜபக்சேவின் உருவப்படத்தினை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது கொடும்பாவியினையும் எரித்துள்ளனர். இந்நிலைமையால் அங்கு 3000 க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் கைதாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளார், நிலைமை சற்று பதற்றமாகவே உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post