Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் பதவி விலகல் ஏற்பு

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் பதவி விலகலை அம்மாநில ஆளுநர் சங்கர நாராயணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், 2009ஆம் ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு 3 மாத காலத்திற்குள் ஒப்புதல் அளித்ததாக அஜித் பவார் மீது புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அஜித் பவார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீர்ப்பாசன திட்ட முறைகேட்டில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், எந்த நெருக்குதலுக்கும் பணிந்து ராஜினாமா செய்யவில்லை என்றும் அஜித் பவார் தெரிவித்திருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித் பவாரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு நேற்றிரவு முதலமைச்சர் சவானுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனைதொடர்ந்து இன்று காலை ஆளுநரைச் சந்தித்த முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், அஜித் பவார் தம்மிடம் அளித்த பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
[vuukle-powerbar-top]

Recent Post