Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆரம்பமாகியது போராட்டம் ~ இடிந்தகரையை அதிர வைக்கும் மக்கள் கூட்டம்

தற்போது இடிந்தகரையில் இருந்து உதயகுமார் தலைமையில் வீதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு 20000 ஆயிரத்தில் இருந்து 25000 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கிராமத்தில் இருந்தும் சுமார் 40000 ஆயிரம் மக்கள் எதிர்பார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமங்களை காவல்துறையினர் முற்றுகையிட்டு அங்கிருக்கும் மக்களை இடிந்தகரைக்கு வரவிடாமல் தடுத்திருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

போராட்டம் இடிந்தகரையில் இருந்து வீதி ஊர்வலமாக மக்கள் அனைவரும் புறப்பட்டிருக்கின்றனர் ஆனால் முடிவது எங்கே என்று தெரியவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

மற்றும் இடிந்தகரையினை சுற்றி சுமார் 5000 துணை இராணுவ படையினர் இருப்பதாகவும் வைராவி கிணறு கிராமத்தில் இருந்து கூடங்குளம் அணுஉலை பகுதி வரைக்கும் கேரளா சிறப்பு படைகளை காணக்கூடியதாகவும் தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கிராம மக்கள் இடிந்தகரைக்கு வர முடியாத பற்சத்தில் அவர்கள் அனைவரும் தூத்துக்குடிக்கு சென்று அங்கு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதில் 30000 ஆயிரம் மக்களை 5000 ஆயிரம் காவல்துறையினர் என்ன செய்துவிட முடியும் என்றுதான் ஒரு பெரிய குழப்பமும் பரபரப்பாகவும் இருக்கிறது. 

மேலும் தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் அலை செய்திகளுடன்.
[vuukle-powerbar-top]

Recent Post