Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உதயகுமாரை காப்பாற்ற உயிரைவிடவும் தயாராகும் இடிந்தகரை மக்கள் (படங்கள்)


உதயகுமாரை காப்பாற்ற  உயிரைவிடவும் தயாராகும் இடிந்தகரை மக்கள் 

இன்று இடிந்தகரைக்கு உதயகுமார் வந்து அங்கிருக்கும் மக்கள் முன்னிலயில் பேசினார். மக்களிடம் இது வரை தான் செய்து வந்த போராட்டம் பற்றி கூறினார். முடிவில் இந்த போராட்டத்திற்காக இறைவன் மீது ஆணையாக தான் யாரிடமும் ஒரு ருபாய் பணம் வாங்கவில்லை என்று கூறினார். உதயகுமாரின் உணர்ச்சியான பேச்சில் நெகிழ்ச்சி அடைந்த மக்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சிலர் உதயகுமாரை  கட்டி தழுவினர். அவர் காலில் விழுந்து அவர் கைதாக கூடாது என கேட்டுக் கொண்டனர். மீனவ இளைஞர்கள் உதயகுமாரையும் ராயனையும் குண்டுக்  கட்டாகக் பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்றனர். உதயகுமாரை காவல் துறை கைது செய்யுமானால் எங்கள் பிணங்களை தாண்டித் தான் செல்லவேண்டும் என அங்குள்ள தாய் மார்கள் சொல்கின்றனர். 

















[vuukle-powerbar-top]

Recent Post