Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பால் தாக்கரே கருத்தால் சர்ச்சை


சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரேவின் பிரதமர் வேட்பாளார் பற்றிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே அவரின் கட்சி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக ஆகும் தகுதி சுஸ்மா சுவராஜ்க்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.இந்த கட்டுரை பாஜக தலைவர்கள் மத்தியில் பெரிய சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கருத்தை பாஜகவின் ஒரு தரப்பினர் வரவேற்த்துள்ளனர் என்றும் மற்றொரு தரப்பினர் எதிர்த்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்து பாஜக தலைமை அறிவித்துள்ள கருத்தில் பால் தாக்கரேவின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் பாஜகவில் நிறைய தலைவர்கள் உள்ளனர் தனிப்பட்ட ஒருவரை சார்ந்து பாஜக இய்ங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து லாலுபிரசாத் யாதவ் ”பால் தாக்கரே அடிக்கடி இதுபோன்று சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார்” என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post