Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் கட்சியினர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. புதுச்சேரி மற்றும் தமிழக அரசுப் பேருந்துகளும் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2 பேருந்துகள் மீது கல்வீசி தாக்குல் நடைபெற்றது. இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post