Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலை போராளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு - முன்னாள் கேரளா முதல்வர்

அணு உலை போராளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு - முன்னாள் கேரளா முதல்வர் 

நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் கேரள முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வி எஸ் அச்சுதனந்தனின் பேட்டியின் தமிழாக்கம் இது.

 ‘இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்களுக்கு பெருந்துயரம் ஏற்படுத்தும் நோக்கில் இந்திய மத்திய அரசு கூடங்குளத்தில் ஒரு அணு உலையை நிறுவியிருக்கிறது... அணு உலைகள் அமைக்கும்போது அதில் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவேண்டும்.. விபத்து ஏற்பட்டால் மக்களும் உயிரினங்களும் பறவை பட்சிகளும் நிமிட நேரத்துக்குள் இல்லாமல் போய்விடும் சக்தி வாய்ந்தவை இந்த அணு உலைகள் ... 

மொத்தமுள்ள இருநூற்றைம்பது நாடுகளில் முப்பதுக்கும் குறைவான நாடுகளே அணுசக்தியை பயன்படுத்தி இதுபோன்ற திட்டங்களை செய்து வந்தன.. அதிலும் இப்போது இந்த நாடுகள் கூட அணுசக்தியை பயன்படுத்தி இத்தகைய திட்டங்களை செய்ய தயங்குகின்றன எல்லா நாடுகளும் அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டஙக்ளிலிருந்து பின்வாங்கிக்கொண்டிருக்கின்றன.. இந்த நிலமையில்தான் மத்திய அரசு மன்மோகன்சிங் அரசு அமேரிக்காவோடு சேர்ந்து அணு ஒப்பந்தங்கள் போட்டதோடு கூடங்குளம் மாதிரியான இடங்களில் அணுமின் நிலையத் திட்டங்களை துவங்கியும் வருகிறது... 

அணு உலையின் ஆபத்துக்களையும் அபாயங்களையும் உணர்ந்து அதனை எதிர்த்து போராடும் மக்களை வெளிநாட்டு பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாகவும் அவர்களை வெளிநாட்டு கைக்கூலிகள் என்றும் ஒரு கள்ள பிரச்சாரத்தை காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளின் கைக்கூலிகள் செய்து வருவது போராடும் மக்களை போராட்டத்திலிருந்து பின் வாங்கச்செய்யும் நோக்கத்தில்தான்.. . எந்த சூழ்நிலையிலும் கூடங்குளம் அணுமின்நிலையம் அமையக்கூடாது எப்போது வெடித்துச் சிதறுமென்று தெரியாது எப்போது ஆபத்து வருமென்று தெரியாது என்று ஆபத்து வருமென்று சொல்லமுடியாது அதனால் மக்களின் வழியே நல்ல வழி.. குழந்தைகளும் எதிர்கால சந்ததியும் எரிந்து சாம்பலாகிவிடாமல் ஜனங்கள் தேர்ந்தெடுத்த வழியே சரியான வழி.. இந்த போராட்டம் வெற்றி பெற எங்களது எல்லா உதவிகளும் உண்டு..’

பிகு:இந்த மூத்த அரசியல் தலைவரின் கருத்தைக்கேட்ட பின்பாவது கம்மியுனிஸ்ட்களும், கருணாநிதிகளும் திருந்த வேண்டும். -

 நன்றி : தமிழன் மகேஷ்
[vuukle-powerbar-top]

Recent Post