Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவல்துறை அராஜகத்தை கண்டித்து இடிந்தரையில் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்



கூடங்குளத்தில் தமிழக அரசால் கட்டவிழ்க்கப்பட்ட  அரச பயங்கர வாதத்தை கண்டித்தும் , அணு உலைகளில் எரிபொருள் நிற்பக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று இடந்த கரை சுற்றியுள்ள பல கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடலில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

கடந்த 9 ஆம் தேதி அன்று காவல்துறை அணு உலை போராளிகளை கடுமையாக தாக்கியதோடு இடிந்தகரை கூடங்குளம் பகுதியில் உள்ள வீடுகளை சூறையாடியது. பொதுமக்களின் சொத்துக்களை சேதப் படுத்தியது . படகுகள் மற்றும் இருசக்கிர வாகனங்களை உடைத்தது காவல்துறை. இதனால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின . போராட்டக் காரர்கள் சமைத்து வைத்த  உணவை கூட விட்டு வைக்கவில்லை . உணவை மண்ணில் கொட்டி வெறியாட்டம் ஆடியது காவல்துறை. பின்பு கடலோர கிராமங்கள் அனைத்திலும் காவல்துறை ஆக்கிரமித்தது .

இதை கண்டிக்கும் வகையிலும் அணுஉலைகளில் எரிபொருள் நிரப்பக்   கூடாது என்ற கோரிக்கை வைத்தும்  இன்று கடலோர கிராம மக்கள் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுக்க  உள்ளனர் . வரலாற்றில் இப்படியான போராட்டம் நடந்ததில்லை. 

[vuukle-powerbar-top]

Recent Post