Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் சசிதர் ரெட்டி இதனை தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் பாதுகாப்பானது தான் என்றும் அவர் கூறினார்.

கல்பாக்கம் அணுமின் நிலையமும் பாதுகாப்பானது தான் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அணுமின் நிலையங்களில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள மாநிலங்களில் ஏற்கனவே ஒத்திகை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post