Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செந்தூரன் உடல் நிலை பாதிப்பு. அவருக்கு கட்டாய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது (படம்)

பூந்தமல்லி சிறப்பு முகாமில் பட்டினிப் போராட்டத்தில் தொடர்ந்து 8 வது நாளாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் செந்தூரனுக்கு தற்போது உடல் நிலை மோசமடையவே , அவருக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் . நீரும் மறுத்து அவர் போராட்டம் செய்வதால் அவரது உடல் நிலை கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. அதனால் மருத்துவர்கள் அவருக்கு வலுக் கட்டாயமாக  ரத்தத்தின் மூலம் க்ளுகோஸ் ஏற்றி உள்ளனர் . 

செந்தூரன் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு  உண்ணா நிலையில் இருந்து வருகிறார். அவர் தனக்காக மட்டும் போராட வில்லை . முகாமில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட அனைத்து ஈழத்து உறவுகளும் திறந்த வெளி முகாமிற்கு மாற்றப் பட வேண்டும் என்பதற்காகவே உண்ணா   நிலையில் இருந்து கொண்டிருக்கிறார் . அரசு இவர் உண்ணா நிலையை கைவிட்டால் மட்டுமே இவரை விடுதலை செய்வோம் என்று கூறி வருகிறது . இவரோ தான் ஒருவர் மட்டும் விடுதலை யாவதில் விருப்பமில்லை எனவும் , முகாமில் உள்ள அனைவருக்கும் ஒரு விடிவு வர வேண்டும் என்பதற்கு தான் தான் உண்ணா நிலை போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.  



















[vuukle-powerbar-top]

Recent Post