Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீனாவை பின்பற்றி சிவகாசியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து

சீனாவை பின்பற்றி, போதிய பயிற்சியின்றி சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதே, விபத்துகள் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே பட்டாசு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சீனா தான். இந்தியாவில் அதிகளவு பட்டாசு உற்பத்தி செய்யும் நகரம் சிவகாசி.

இந்த நகரத்தை சுற்றி 600 பட்டாசு தொழிற்சாலைகள் அதிகாரபூர்வமாக இயங்குகின்றன. இவற்றின் மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆண்டொன்றுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

முன்பு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு தான் வரவேற்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக, வண்ணமயமான பட்டாசுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற வண்ணமய பட்டாசுகள் தயாரிப்பில் சீனா தான் முன்னணியில் உள்ளது. எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைவிட ஒளிமயமான பட்டாசுகள் உற்பத்திக்கு வரவேற்பு இருந்ததால், சீனத் தயாரிப்புகளை போல பட்டாசு தயாரிக்கும் முயற்சியில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், புதிய ரசாயன கலவைகளை சேர்க்க வேண்டியிருப்பதால் இந்த தயாரிப்பு ஆபத்தானது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

இதற்கு உற்பத்தியாளர்கள் மட்டுமன்றி தொழிலாளர்களும் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மக்னீஷியம், அலுமினியம் ஆகியவற்றின் கலவையான மக்னீலியம் மூலம் பட்டாசு உற்பத்தி செய்வதை விட, சீனா, பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தும் pottasium chlorate, pottassium perchlorate ஆகிய ரசாயனங்களை கையாளுவது மிகவும் ஆபத்தானது.

இதில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை, முறையற்ற வகையில் சோதனை செய்து பார்ப்பதால்தான் அதிக விபத்துகள் நேரிடுவதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post