Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை நோக்கி மக்கள் வருகை ~ சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் போராட்டம்

இன்று காலை ஒன்பது மணிக்கு முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் போராட்டம் நடைபெற உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இப்பொழுது இடிந்தகரையின் நிலவரம் 

மக்கள் அனைவரும் அனைத்துக்கும் தயாராக இருப்பதாகவும் மற்றும் கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குலி, கூடங்குளம், உவரி, பெரியதாழை, கூடுதாழை, கூட்டப்பனை, விஜயாபதி, காடுதாழா, காமனேரி, வைராவி கிணறு, ஆவடியால்புரம் ஆகிய 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் இடிந்தகரை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதுவரைக்கும் எந்தக்கட்சியும் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்த பின்னரே அவர்கள் அங்கு சமூகமளிக்கக்கூடும் என தெரிகிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக இடிந்தகரை நோக்கி வருவதாகவும் அதில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆண்கள் வயது முதிர்ந்தவர்கள் என வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பார்க்கப்போனால் கிராமத்தினை முற்று முழுதாக காலி செய்து வருவது போலவே தோற்றமளிப்பதாக தெரிகிறது.

மேலும் அலை செய்திகளுடன் இணைந்திருங்கள் உடனடி இடிந்தகரை தகவலுக்கு.
[vuukle-powerbar-top]

Recent Post