Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்திற்கு தண்ணீர் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்திற்கு 86 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக்த்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்திற்கு கார்நாடகம் 200 கோடி கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது.இதற்கு பதில் மனு அளித்த கர்நாடக அரசு வறட்சியின் காரணமாக 86 கோடி கன அடி தான் திறந்துவிட முடியும் எனக் கூறியது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 86 கோடி கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும் 19-ஆம் தேதி பிரதமர் தலமையில் நதிநீர் ஆணையம் கூடவிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post