Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அஜித்தின் படத்திற்காக சிபாரிசு செய்யப்படும் அனுஷ்கா.


தாண்டவம் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை அனுஷ்காவின் கையில் தற்போது இரண்டாம் உலகம்,அலெக்ஸ் பாண்டியன் மற்றும் சிங்கம் 2 ஆகிய படங்கள் உள்ளன.இவ்வாறு பல படங்களை தன் வசம் வைத்திருக்கும் அனுஷ்காவிற்கு இன்னுமொரு வாய்ப்பாக, நடிகர் அஜித்தின் 53 ஆவது படத்தில் அவருடன் ஜோடி சேரும் வாய்ப்பு அனுஷ்காவிற்கே கிடைக்க கூடும் எனும் ஒரு செய்தி காட்டு தீபோல கோடம்பாக்கம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது.

இதன் காரணமாக, அவரது வீட்டு வாசல் கதவை தட்டும் பிற மொழி படங்களை நிராகரித்து வருகிறார் நடிகை அனுஷ்கா.தற்போது தெலுகு சினிமாவில் மிக பரபரப்பாக நடித்து வரும் அவர், அஜித்தின் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்ற கனவில் புதிய தெலுகு படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

கோடம்பாக்கம் நாயகர்கள் அனைவரது விரும்பத்தக்க நாயகியாக வலம் வரும் அனுஷ்காவிற்கு நிச்சயம் அஜித்தின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் தமிழ் சினிமா வல்லுனர்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post