Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலை அடுத்த ஆண்டு தான் செயல்படும். மக்களை குழப்பும் அணு சக்திக் கழகம்


கூடங்குளம் அணு உலை அடுத்த ஆண்டு தான் செயல்படும். மக்களை குழப்பும் அணு சக்திக் கழகம்  

இன்று மும்பையில் நடைபெற்ற அணுஉலை மாநாட்டில் கூடங்குளத்தின் முதல் அணுமின் நிலையம் அடுத்த ஆண்டு செயல்பட துவங்கும் என அணுசக்தி கழக தலைவர் ஆர் கே சின்ஹா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மும்பையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு காரணமாகவும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு வராத காரணத்தினாலும், கூடங்குளம் முதல் அணுஉலை எப்போது செயல்படும் என குறிப்பிட்ட காலத்தை தற்போது கூற முடியாது. முதல் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர், அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இது அடுத்த சில மாதங்களில் முடிவடையும் என கூறியுள்ளார் . 

இந்த செய்தியின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகவே உள்ளது . காரணம் இத்தனை நாட்கள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மற்றும் தினமலர் பத்திரிக்கையும் அணு உலை இன்னும் 15 நாட்களில் தொடங்கும் எனவும் அதன் மூலம் தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனை தீர்ந்து விடும் எனவும் மக்களுக்கு சொல்லி வந்தனர். இப்போது அணு உலைகளில் எரிபொருள் நிரப்ப படுகிறது என்ற நிலையில் திடீரென்று அணு உலை அடுத்த ஆண்டு தான் செயல்படத் தொடங்கும் என்பது மக்களை பெரிதும் குழப்பத்தில்  ஆழ்த்துகிறது. இது அரசின் திட்டமிட்ட சதியா அல்லது அணு உலைகளில் ஏற்பட்டுள்ள கோளாறா என்று கேள்வி எழுப்பி  உள்ளனர் அணு உலை எதிர்பாளர்கள் .அணு உலை  போராட்டம் வீரியம் அடைந்துள்ள நிலையில் இப்படியொரு தகவல் வெளிவந்துள்ளது அணு உலை போராளிகளை எச்சரிக்கையாக இருக்க வைக்கிறது.  

எது எப்படியோ கூடங்குளம் அணுஉலைகளை உறுதியாக மூடும் வரை போராட்டம் தொடரும் என அணு உலை போராளிகள்  தெரிவித்து உள்ளனர் .   


[vuukle-powerbar-top]

Recent Post