Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடிகர் விமலை இயக்கப்போகும் இயக்குனர் எழில்.


தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில்.இவரது படங்களான  துள்ளாத மனமும் துள்ளும்,பெண்ணின் மனதை  தொட்டு,பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்கள் மிக பெரியளவில் வெற்றி பெற்றவை.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் சிவா கார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கிய மனம் கொத்திப் பறவை படமானது 100 நாட்களை கடந்துள்ளது.இந்த வெற்றியை அடுத்து இயக்குனர் எழில் இயக்கப் போகும் புதிய படத்தில், நடிகர் விமல் நடிக்கவுள்ளார்.

தற்போது நடிகர் விமல் கேடி பில்லா  கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்,இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்ததும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post