Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோவையில் பயங்கரம் – கல்லூரி மாணவி படுகொலை

கல்லூரி மாணவி ஒருவரை சகமாணவரே மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்து கொலை செய்ததோடு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவியின் தாயும் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள சிறு கிராமம் கல்வீரம்பாளையத்தில் வசித்து வந்த ஸ்ருதிமேனன் என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சர்வதேச வணிக பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வந்தார். அதே கல்லூரியில் பயின்று வந்த அஜ்மல் என்பவரும், மாணவி ஸ்ருதிமேனனும் இளநிலை பட்டம் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று ஸ்ருதியின் வீட்டிற்கு காரில் சென்ற அஜ்மல், அவர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது அவரின் தாயார் லதா என்பவர் கதவைத் திறக்க, அவரை கத்தியால் 9 இடங்களில் அஜ்மல் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். 

அப்போது, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மாணவி ஸ்ருதியையும் கத்தியால் குத்தி விட்டு, அவர் மீது, தன் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துள்ளார். அத்தோடு நிற்காமல், தீயில் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருதியை கட்டி அணைத்து தானும் தீயில் கருகி உயிரை மாய்த்துள்ளார். இதில் ஸ்ருதியும், அஜ்மலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கத்தியால் குத்துப்பட்ட மாணவியின் தாயார் லதா, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து பிளாஸ்டிக் கேன், தீப்பெட்டி, கத்தி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், மாணவி ஸ்ருதி தமக்கு வேறு ஒரு இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால், தம்மை விட்டு விலகிவிடுமாறு அவரை கேட்டுக்கொண்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த மாணவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post