Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை புதுடெல்லி புறப்படுகிறார் மகிந்த


தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையிலும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டபடி நாளை இந்தியா புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது பயணத்தின் போது, சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே, எதிர்ப்புப் போராட்டங்கள், தொடருந்து மறியல் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ராஜபக்சவின் வருகைக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் வாகனங்கள் ஓடவில்லை. வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்தினால், புதுவையில் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post