Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

சிவகாசி அருகே முதலிப்பட்டியில் 38 உயிர்களை பலி வாங்கிய பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ளார்.

இதன் படி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சைதன்ய பிரசாத் இந்த விசாரணையை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடி மருந்து சட்ட விதிகளின் படி இந்த விசாரணையை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தின் தீவிரத்தை பற்றி விசாரணை நடத்த இவருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக மத்திய அரசின் வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த கள அதிகாரிகள் 3 பேர் நேற்று முன்தினம் முதல் விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இத்துறையின் உயரதிகாரிகள் நேற்று முதல் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post