Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து

மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. எனினும் அதிஷ்டவசமாக இந்த விபத்தில் நோயாளிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 2-வது தளத்தில் நேற்றிரவு 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கு அருகே ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. 2 தீயணைப்பு வண்டிகளில் சென்ற 15 தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு பேர், தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் முதல் தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post