Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"பரதேசி" படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வேதிகா.


பாலாவின் "பரதேசி" மூலமாக, தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என மிக தெளிவாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் நடிகை வேதிகா.

"பரதேசி" படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்ட வேதிகா," பரதேசி" படத்தில் தான் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்னதாக, பாலாவின் படத்தில் நடிப்பது மிக மிக கஷ்டமான விடயம் என்றும்,அத்தோடு அவ்வளவு சீக்கிரத்தில் பாலாவை திருப்திப்படுத்திவிட முடியாது என்றும் பல முரண்பட்ட கருத்துக்களை தனக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக தெரிவித்தார்.

ஆயினும் "பரதேசி" படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே,பாலா நெருகிய தோழமையுடன் பழகியதாகவும், மிக பணிவான முறையில் தன்னை வழிநடத்தியதாகவும் தெரிவித்தார்.அத்தோடு மிக கச்சிதமாக, தன் படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியிடம் இருந்து எவ்வாறானதொரு நடிப்பு தேவையோ, அதை பெற்றுக்கொள்ளும் வல்லமை அவரிடத்தில் இயல்பாகவே உள்ளது என்றார் அவர்.

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் கூட, மிக அவதானமாகவும், நிதானமாகவும்  முடிவு எடுக்கக்கூடிய மிக சிறந்த மனிதர் பாலா என்பது அவரது படத்தில் நடித்த போதுதான் தனக்கு தெரிந்ததாகவும் வேதிகா கூறினார்.

[vuukle-powerbar-top]

Recent Post