Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மம்தாவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

மத்திய அரசுக்கான ஆதரவை மமதா பானர்ஜி விலக்கிக் கொண்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் 6 பேர் இன்று பதவி விலகுகின்றனர்.

பதவி விலகல் கடிதங்களை கொடுப்பதற்காக முதலமைச்சர் மமதாவிடம், காங்கிரஸ் அமைச்சர்கள் நேரம் கோரவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் எம்கே நாராயணனை சந்தித்து மமதா அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதத்தை அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொல்கத்தாவில் இன்று காலை கூடி ஆலோசிக்கின்றனர். அதன்பின்னர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மனாஸ் புனியா தலைமையில் ஆறு அமைச்சர்களும் மமதாவை சந்திக்க அனுமதி கோரவிருப்பதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பிரதிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post