Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக புதிதாக வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலைமை வழக்கறிஞர் பிராசாந்த் பூசன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் சார்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில் கூடங்குளம் அணு உலையால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டு தொகையை இரசிய நிறுவனம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கும் இரசியாவிற்கும் உள்ள உடன்பாட்டில் அணு உலையால் அசம்பாவிதம் ஏற்ப்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை எதிர்த்தே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

அணு உலையால் எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த உலையை நிறுவிய நிறுவனம் 1500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.ஆனால் கூடங்குளம் அணு உலையை நிறுவிய இரசிய நிறுவனம் எந்த இழப்பீடும் தரமுடியாது என அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வருகிற 20-ஆம் தேதி விசாரணைக்கு வருவதையடுத்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post